விவசாயத்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கு நீண்ட காலம் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்குவதில்லை – விவசாய அமைச்சர் தெரிவிப்பு!
Saturday, April 8th, 2023விவசாயத்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கு நீண்ட காலத்திற்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்குவதில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.
விவசாய அமைச்சு, விவசாய திணைக்களம், விவசாய அபிவிருத்தி திணைக்களம் உள்ளிட்ட அனைத்து மாகாண விவசாய நிறுவனங்களிலும் பணிபுரியும் அதிகாரிகள் இந்த தீர்மானத்திற்கு உட்பட்டவர்கள் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் நீண்ட காலம் வெளிநாடுகளுக்குச் சென்றால் அது நாட்டின் விவசாயத் துறையை வீழ்ச்சியடையச் செய்யும் என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஜனாதிபதியின் எச்சரிக்கை!
விடுவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பயன்தரும் மரங்கள் களவாடப்பட்டு வருவதாக மக்கள் கவலை!
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு!
|
|