விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கிளைபோசைட் கிருமி நாசினிக்கு தடை தளர்வு!

Sunday, February 25th, 2018

பயிர்ச் செய்கைக்காகப் பயன்படுத்தப்படும் கிளைபோசைட் அடங்கிய கிருமிநாசினியின் தடையினை தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களைத் தவிர ஏனைய பிரதேசங்களுக்குவிடுவிக்குமாறு தேசிய பொருளாதார சபைக்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கிருமிநாசினி ரஜரட்ட பிரதேசத்தில் பரவிய சிறுநீரக நோயின் காரணமாக இலங்கையில் தடை செய்யப்பட்ட போதிலும் சட்டவிரோதமான முறையில் சிலபிரதேசங்களில் விநியோகிக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கிருமிநாசினியின் தடையினைத் தொடர்ந்து தேயிலை மற்றும் இறப்பர் போன்ற பயிர்களிலும் தாக்கம் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய பொருளாதாரசபைக்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைவாக நெற் பயிர்ச் செய்கைக்கு கிளைபோசைட் அடங்கிய கிருமிநாசினியினை பயன்படுத்த தொடர்ந்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த கிருமிநாசினியினை தேயிலை மற்றும் இறப்பர் பயிர் செய்கைக்கு பயன்படுத்தும் தடையினை நீக்க யோசனை முன்வைக்கபட்டுள்ளமையும்குறிபிடத்தக்கது

Related posts: