விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றச் சென்ற ஐவர் மருத்துவமனையில்!

Monday, March 4th, 2019

பிரதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றச் சென்றவர்களில் சாலை விபத்தில் சிக்கி ஐவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து யாழ்ப்பாணம் மறவன்புலவில் இன்று இடம்பெற்றது.

தென்மராட்சி பிரதேச பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளின் எல்லே போட்டிகள், கைதடி சரஸ்வதி விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஆண்களுக்கான போட்டியில் கலந்து கொள்ள மறவன்புலவில் உள்ள விளையாட்டுக் கழக வீரர்கள் உந்துருளியில் சென்றனர்.

உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று சிக்கி விபத்துக்குள்ளாகின. அவற்றில் பயணித்த ஐவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துமவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related posts: