விளையாட்டுத் துறை அபிவிருத்தி: வடக்கு கிழக்கிற்கு 35% நிதி நிதி ஒதுக்கீடு!

Tuesday, December 6th, 2016
விளையாட்டுத் துறையின் அபிவிருத்திக்காக சுமார் 415 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்தத் தொகையில் 35 சதவீதத்திற்கு மேலான நிதி வடக்கு, கிழக்கில் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

விளையாட்டுத்துறை அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிய விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் விளையாட்டுச் சட்டம் திருத்தப்படும் என்று குறிப்பிட்டார். பியகம விளையாட்டுத் தொகுதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.  உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் பயிற்சிக் கூடம் இலங்கையில் நிர்மாணிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

33c03aa515600df4a8c2645ebfbd4630_XL