விளையாட்டுத் துறையை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுங்கள் – துறைசார் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் நாமல் வலியுறுத்து!

Wednesday, April 7th, 2021

விளையாட்டுத் துறையை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்திற்கு விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக தொடர்பில் கோப் குழு என்னும் பொது நிறுவனங்கள் தொடர்பான நடாளுமன்ற தெரிவுக்குழுவின் கூட்டத்தின் போது தெரியவந்துள்ளதை அடுத்தே அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

கோப் குழுவில் நேற்றையதினம் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையாகியிருந்த நிலையில் குறித்த நிறுவனத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவது தெரியவந்துள்ளது.

குறிப்பாக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தில் சட்ட பிரிவொன்று இல்லை என விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.

எனவே விசாரணைகளை மேற்கொள்ள எந்தவொரு அதிகாரியும் இல்லை என்றும் புதிய விடயங்களை உள்ளீர்ப்பதற்கான அனுபவம் தொடர்பில் சிக்கல் நிலைமை உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் எனவே விளையாட்டு துறையை மறுசீரமைக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: