விளையாட்டுத்துறை அமைச்சருக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சி – இலங்கை அணியின் முன்னாள் செயல்திறன் ஆய்வாளருக்கு ஏழுவருட தடை!

இலங்கை அணியின் முன்னாள் செயல்திறன் ஆய்வாளர் சனத் ஜெயசுந்தரவை ஊழலிற்கு எதிராக ஒழுக்காற்று விதிமுறைகளை மீறியமைக்காக ஏழு வருடங்களிற்கு ஐசிசி தடை செய்துள்ளது.
சனத் ஜெயசுந்தர இரண்டு வருடங்களிற்கு முன்னர் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு இலஞ்சம் கொடுக்க முனைந்தார் என ஐசிசி தெரிவித்துள்ளது.
சர்வதேச போட்டியின் முடிவை முன்னேற்றத்தை அது நடத்தப்படும் விதத்தினை தீர்மானிக்க முயன்றார் என ஐசிசி குற்றம்சாட்டியுள்ளது.
தனது நடவடிக்கைகள் குறித்த விசாரணைகளை குழப்புவதற்கு அல்லது தடுப்பதற்கு ஜெயசுந்தர முயன்றார் என ஐசிசி தெரிவித்துள்ளது.
அமைச்சருக்கு இலஞ்சம் கொடுக்க முனைந்தமை கடுமையான மீறல் என தெரிவித்துள்ள ஐசிசி அவர் தனது நடவடிக்கைகளை மறைக்க முயன்றமையும் தனது நடவடிக்கைகள் குறித்து கவலை அடையாமையும் கடும் ஏமாற்றமளிக்கும் விடயங்கள் என தெரிவித்துள்ளது.
இவ்வாறான விடயங்களை நாங்கள் சகித்துக்கொள்ளப் போவதில்லை எனவும் ஐசிசி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|