விளையாட்டுத்துறையில் சிறப்பாக செயற்படுபவர்களுக்கு கிடைத்தது அதிஸ்டம்!

இலங்கையில் விளையாட்டுச் செயற்பாடுகளில் சிறப்பான திறமைகளை கொண்ட வீர வீராங்கனைகளுக்கு அரச நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்களை பெற்றுதர அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
தற்போது இலங்கையை சர்வதேச ரீதியில் கொண்டு செல்லும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அதனடிப்படையில் முதற் கட்டமாக விளையாட்டுகளில் தனிப்பட்ட திறமைகள் கொண்ட வீர வீராங்கனைகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் விளையாட்டு நிகழ்வுகளில் திறமையுடைய வீரர்களுக்கு அரச நிறுவனங்களிலே வேலை வாய்ப்புக்களை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Related posts:
தவிக்கும் அவுஸ்திரேலிய அணி: புலம்பும் புதிய தலைவர்!
மோட்டார் சைக்கிளைத் திருடியவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது!
இலங்கையின் பொருளாதார நிலைமையை மதிப்பீடு செய்வதற்கு நாளை இந்தியாவிலிருந்து வருகிறது விசேட தூதுக்குழு!
|
|