விளையாட்டுதுறை தொடர்பில் விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கான காலவரையறை நீடிப்பு.

விளையாட்டுதுறை தொடர்பில் விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கான காலவரையறை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது
கல்வியமைச்சில் இன்று இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி இராஜங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்
குறித்த விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி திகதி இன்றாகும் எனினும் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அஞ்சல் சேவையாளர்களின் சேவை நிறுத்த போராட்டம் காரணமாகவும், பல தரப்பினரின் கோரிக்கைகளுக்கமையவும் இந்த விண்ணப்ப முடிவு திகதி 29வரை நீடிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, இந்த வருட கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அடையாள அட்டை இன்று அனுப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார்
Related posts:
வினைத்திறனற்றவர்களாக இருந்துகொண்டு மோசடி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவருவது நகைப...
இடியுடன் கூடிய மழை - பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படும...
|
|