வில்பத்து சரணாலயப் பகுதி காடழிப்பு விவகாரம் – வனப்பகுதி மீண்டும் செழிப்புற நடவடிக்கைகளை ரிஷாட் பதியூதீன், தனது சொந்த நிதியில் செய்ய வேண்டும் என நீதிமன்று உத்தரவு!

வில்பத்து சரணாலய வனப் பகுதியை மீண்டும் செழிப்புறச் செய்வதற்கான நடவடிக்கைகளை ரிஷாட் பதியூதீன், தனது சொந்த நிதியில் செய்ய வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வில்பத்து சரணாலயத்தை அண்மித்த வனப் பகுதி, அழிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் வனப் பகுதியை அழித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் மீதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வனப் பகுதியை மீண்டும் செழிப்புறச் செய்வதற்கான நடவடிக்கைகளை ரிஷாட் பதியூதீன், தனது சொந்த நிதியில் செய்ய வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொக்குத்தொடுவாய் கடற்பகுதியில் 19 மீனவர்கள் கைது!
நிலுவையில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் - அமைச்சர் தலதா அதுகோரள!
நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - அமைச்சர் பந்துல குணவர்த்தன உறுதி...
|
|