விலை திருத்தம் குறித்து நாளைமறுதினம் அறிவிக்கப்படும் – லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தகவல்!

Friday, November 4th, 2022

எரிவாயு விலை திருத்தம் குறித்து நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தனது நிறுவனத்தில் போதுமான அளவு எரிவாயு கையிருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விலை குறையும் என வெளியாகும் செய்திகளை கருத்திற்கொண்டு விற்பனை முகவர்கள் கையிருப்புக்கான முன்பதிவுகளை தாமதப்படுத்துவதால் சந்தையில் தற்போது எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஆசிரியர்களுக்காக மாணவர்களிடம் நிதி சேகரிக்க முடியாது - கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்!
சுகாதார சட்டங்களை மீறி செயற்படும் பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்க வைத்திய அத...
கடல்சார் பாதுகாப்பினை உறுதி செய்ய இலங்கை தனது இரண்டாவது கப்பலை அனுப்பவுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரி...

பயங்கரவாதத்தினை ஒழித்தோம் எனக் கூறும் அரசாங்கத்திற்கு  ஏன் போதைப்பொருள்களை கட்டுப்படுத்த முடியாமல் இ...
பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது - மத்திய வங்கி ஆளுநர...
மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் நோக்கில் 18 வீத வற் வரியை 15 வீதமாக குறைக்க அரசாங்கம் தீர்மா...