விலை அதிகரிப்பு குறித்து நிதியமைச்சர் விளக்கம்!

நாட்டு மக்களுக்கு கூடுதலான நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே லொத்தர்; டிக்கட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
லொத்தர் டிக்கட்டுகளின் விலை அதிகரிப்பு குறித்து நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயத்தை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-
லொத்தர் டிக்கட்டுகளின் விலை அதிகரிப்புக்கு எதிராக பல்வேறு பிரதேசங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுவருpகிறது. இவ்வாறு போராட்டம் நடத்தும் டிக்கட் முகவர்கள் இதுவரை தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுகோள் விடுக்கவில்லை எனவே இந்த போராட்டத்திற்கு பின்னணியில் அரசியல் சக்திகள் செயற்படலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.
லொத்தர் டிக்கெட் விற்பனையிலிருந்து எவராது விலகிக் கொண்டால், அந்த விற்பனையாளருக்கு பதிலாக குறிப்பிட்ட சேவைகளை வழங்க பலர் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தமது விற்பனையின் கொமிஷன் கட்டணங்களை உயர்த்தக்கோரி போராட்டம் நடத்தும் லொத்தர் டிக்கட் விற்பனையாளர்கள் மற்றும் முகவர்களின் நடவடிக்கைகளை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
|
|