விலை அதி­க­ரிப்­பது தொடர்பில் தீர்மானம் எதுவுமில்லை– பெற்றோலியத் துறை அமைச்சு!

Tuesday, October 3rd, 2017

எரி­பொ­ருட்­களின் விலையினை அதி­க­ரிப்­பது தொடர்பில் இது­வரை எந்த தீர்­மா­னமும் எடுக்கவில்லை என பெற்றோ­லியம் மற்றும் பெற்­றோ­லிய வளத்துறை அமைச்சு அறி­வித்­துள்­ளது.

பெற்றோல் மற்றும் டீசல் விலை அதி­க­ரிப்­பது தொடர்­பாக எந்த தீர்­மா­னத்­தையும் அமைச்சு இதுவரை மேற்­கொள்­ள­வில்லை. அத்­துடன் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரி­பொ­ருட்­களின் விலை அதி­க­ரிப்­பது தொடர்­பாக எந்த கோரிக்­கை­யையும் முன்­வைக்­க­வில்லை. ஐ.ஓ.சி நிறு­வ­னத்­துக்கு சம­மாக இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னமும் நட்­ட­ம­டை­கின்­றது.

மேலும் இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் தற்­போது பெற்றோல் லீட்டர் ஒன்றின் மூலம் 16 ரூபாவும் டீசல் லீட்டர் ஒன்றின் மூலம் 06 ரூபாவும் நட்­ட­ம­டைந்து வரு­கின்­றது. அத்­துடன் இலங்கை மின்­சா­ர­சபை மற்றும் தனியார் மின் சக்தி நிறு­வ­னங்கள் பெற்­றுக்­கொண்ட எரிபொருட்களுக்கு செலுத்­த­வேண்­டிய தொகையை செலுத்­தாமல் வழி­விட்டு வரு­கின்ற காரணமாக இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் பாரிய நிதித் தட்­டுப்­பாட்டு பிரச்­சி­னைக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றது.

மேலும் கடந்த சில வரு­டங்­க­ளாக உலக சந்­தையில் மசகு எண்ணெய் பரல் ஒன்றின் விலை பல சந்தர்ப்­பங்­களில் கூடி, குறை­வ­டைந்­துள்­ளது. 2015 ஜன­வரி மாதத்தில் உலக சந்­தையில் மசகு எண்ணெய் பெரல் ஒன்று அமெ­ரிக்க டொலர் 50.23 ஆக இருந்­த­துடன் 2016 ஜன­வரி மாதம் ஆகும் போது அது அமெ­ரிக்க டொலர் 29.49 வரை குறை­வ­டைந்­தது.

அதே­போன்று 2016 டிசம்பர் மாதத்தில் உலக சந்­தையில் மசகு எண்ணெய் பெரல் ஒன்றின் விலை அமெரிக்க டொலர் 54.63 ஆக இருந்ததுடன் 2017 செப்டம்பர் ஆகும் போது அது அமெரிக்க டொலர் 51.49ஆக குறைவடைந்தது என அமைச்சின் செய­லாளர் உபாலி மார­சிங்க விடுத்­துள்ள அறிக்­கை யில் தெரிவித்துள்ளார்.

Related posts: