விலையை குறையுங்கள் – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் நீர்கொழும்பு கொச்சிக்கடையில் தேவாலயமொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அவர், அங்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தனவை சந்தித்து மீனவர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடும் போது இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் அங்கு கவிந்த ஜயவர்தனவிடம் தெரிவித்துள்ளதாவது:
மீனவ மக்கள் என்னுடன் பேசும்போது மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்ததுடன் விலையை குறைப்பதற்கு நடவடிக்கையெடுக்க முடியுமா எனவும் கேட்கின்றனர். மீனவர்கள் அதிருப்தி நிலையில் இருக்கின்றனர். இந்தச் செய்தியை அரசாங்கத்திடம் எடுத்துச் சென்று விலையை குறைப்பது தொடர்பாக ஆராயுமாறு கேட்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|