விலகிச் சென்றவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனை – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

Monday, February 6th, 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனை பெற்று வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினர் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தலைவர் இல்லாததால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்த சாகர காரியவசம், தேர்தலில் வெற்றிக்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

000

Related posts: