விரைவில் முச்சக்கர வண்டிகள் தொடர்பான ஒழுங்குமுறை அறிக்கை!

Monday, February 13th, 2017

முச்சக்கர வண்டி விதிமுறைகள் தொடர்பிலான இலங்கை தர நிர்ணய பணியக வரையறை பற்றிய அறிக்கையை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள், பெற்றுக் கொடுக்கவுள்ளதாக, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

மேலும், முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்படும் மீற்றர் எந்த அடிப்படையில் தயாரிக்கப்பட வேண்டும் என, இதன் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும், அதன் தலைவர் சிசிர கோதாகொட கூறியுள்ளார்.

மக்களுக்கு மிகச் சிறந்த தரமான முச்சக்கர வண்டி சேவைகளை வழங்குவதை நோக்காகக் கொண்டே இந்த வேலைத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1724786120three_wheeler

Related posts: