விரைவில் போர்: இலங்கைக்கும் ஆபத்து  – முன்னாள் அமைச்சர் திஸ்ஸவிதாரண!

Monday, October 2nd, 2017

அமெரிக்கா– சீனா போர் மிக விரைவில் தோன்றும் நிலை காணப்படுகின்ற நிலையில் இலங்கையும் அதில் தொடர்புபடும் அபாயம் உரவாகும் என முன்னாள் அமைச்சர் திஸ்ஸவிதாரண எச்சரித்துள்ளார்.

கொழும்பில் மகிந்த அணி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது –

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே இலங்கையின் பாதுகாப்புச் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது.வெகு விரைவில் இந்த அரசு திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவுக்கு கையளிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது.அதன் பின்னர் இந்து மா சமுத்திரப் பகுதியில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கும்.அதற்கு ஒத்தாசை வழங்கும் வகையிலேயே இலங்கையின் பாதுகாப்புச் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது.இராணுவத்தினருக்கான பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்

Related posts: