விரைவில் பொலிஸ் திணைக்களத்தில் தமிழ் தொலைத்தொடர்பு சேவை!

Thursday, September 8th, 2016

விரைவில் ஆரம்பமாகும் பொலிஸ் திணைக்களத்தில் தமிழ் தொலைத்தொடர்பு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மடு பிரதேச செயலகத்தில் இன்று இடம் பெற்ற (08) நிகழ்வின் போதே வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளார். வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தெண்ணகொண் தலைமையில் இடம்பெற்ற சிவில் குழுவின் மறு சீரமைக்கப்பட்ட திட்டம் நிகழ்வில் பொலிஸாரினால் பொதுமக்களிடம் சில கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொது மக்கள் சார்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு கொடுப்பதற்கு தொடர்பு கொள்ள தமிழ் பொலிஸாரை ஏன் நியமிக்கவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்,

கடந்த முப்பது வருடம் நடந்த யுத்தம் காரணமாகதான் இதுவரையும் தமிழ் பொலிஸார் இல்லை என்றும் இப்பொழுதுதான் தமிழ் பொலிஸாரை இணைத்து வருவதோடு புதிய தமிழ் தொலை தொடர்புகளையும் உருவாக்கி வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இதன் முதற்கட்டமாக 1188 இலக்கம் மூலம் தமிழ் தொலைத்தொடர்பு சேவை எதிர் வரும் 10.09.2016 அன்று ஆரம்பிக்கப்படும் என வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

sl_police_flag

Related posts: