விரைவில் பலாலி சர்வதேச விமான நிலையம் சேவையை தொடரும் – சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு!

Friday, February 26th, 2021

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சுற்றுலா விமான சேவைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் நேற்றையதினம் சுற்றுலாத்துறை அமைச்சில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சுற்றுலா விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பது இந்திய அரசாங்கத்தின் ஆலோசனையாகும் என்று சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தடைப்பற்றிருந்த பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் அதன் செயற்பாடுளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: