விரைவில் பனைசார் டிப்ளோமா கற்கைநெறி!

Saturday, April 28th, 2018

பனை அபிவிருத்தி சபையால் பனைசார் டிப்ளோமா கற்கைநெறி வழங்கப்படவுள்ளது என பனை விரிவாக்கல் முகாமையாளர் கே.கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

பனை அபிவிருத்தி சபை தனது தூரநோக்குக்கு அமைய எதிர்காலத்தில் வளப்பயன்பாடு மற்றும் வளப்பாதுகாப்பு என்பவற்றின் நிலையை உயர்த்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

பனைசார் உற்பத்தியாளர்களுக்கும் சயதொழில் ஆர்வலர்களுக்கும் பனைசார் உயர்கல்வி வழங்குவதற்காக பனைசார் டிப்ளோமா கற்கைநெறி வழங்கப்படவுள்ளது.

இந்த கற்கைநெறி NVQ Level 05 க்கு ஈடானதாக அமையப் பெறும். சபையின் மாவட்ட முகாமையாளர்களின் சிபார்சில் பயிலுநர்கள் இணைக்கப்படுவர். இது விடுதி வசதியுடன் கூடிய தங்குமிட பயிற்சியாகும்.

இதற்கான பனைசார் தொழில்நுட்ப நிறுவனத்திற்குரிய கட்டடம் அமைச்சர் டி.எம்.கே.சுவாமிநாதனால் அடிக்கல் நடப்பட்டு கட்டிடப்பணி நடைபெற்று வருகிறது. பனை அபிவிருத்திச் சபையில் நடைமுறைப்படுத்தப்படும் எதிர்காலத் திட்டங்களில் இதுவும் ஒன்றாக காணப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

Related posts: