விரைவில் தமிழ் சிறைக்கைதிகள் விடுதலை – ஜனாதிபதி நடவடிக்கை!

வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறைச்சாலைகளிலுள்ள அனைத்து தமிழ்க்கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இவர்களது விடுதலை குறித்து அமைச்சரவைக்கு அறிவித்திருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.
அத்துடன் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பது தொடர்பில் அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனவரி மாதத்தில் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜனவரி மாதத்திற்கு முன்னதாகவே கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டர்.
Related posts:
அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற குற்றத்தில் 150 பேருந்துகளின் அனுமதிப் பத்திரம் இரத்து - போக்குவரத்து அமை...
அனைத்து சுற்றறிக்கைகளும் இரத்து - ஓகஸ்ட் 2 முதல் அரச சேவை முழுமையாக வழமைக்கு திரும்பும் என ஜனாதிபதிய...
எரிவாயு வெடிப்பை வைத்து எதிர்க்கட்சி அரசியல் இலாபம் தேடுகிறது - இராஜாங்க அமைச்சர் குற்றச்சாட்டு!
|
|