விரைவில் கிரிக்கெட் தேர்தல் : சட்டமா அதிபர் திணைக்களம்!

Friday, July 6th, 2018

இலங்கை கிரிக்கெட்டின் தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் 31ஆம் திகதி இந்தத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ள போதும் இன்னும் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக்கப்படவில்லை.
இதனிடையே 6 மாதங்களுக்குள் இலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் நடைபெறாவிட்டால், அதன் உறுப்புரிமை மறுபரிசீலனை செய்யப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: