விரைவில் கல்வி முறைமையில் மாற்றம் – பல மாவட்டங்களில் ஆசிரிய வெற்றிடங்கள் அதிகமுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, June 8th, 2022

சர்வதேச ஓட்டத்துக்கு ஏற்ப இலங்கையின் கல்வி முறை இல்லையென்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது எனவே இலங்கையின் கல்வி முறையில், சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் கல்வி முறையை பின்பற்றி மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு கிழக்கில் அதிக ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்

அத்துடன் சிங்களம் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் மத்தியில் மேலதிக ஆசிரியர்கள் உள்ளனர்.

மாகாண பாடசாலைகளை பொறுத்த வரையில் தென் மாகாணத்தில் 421 ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தில் 224 மேலதிக ஆசிரியர்கள் உள்ளனர். மத்திய மாகாணத்தில் 114மேலதிக ஆசிரியர்கள் உள்ளனர்.

வடமேல் மாகாணத்தில் 2383 வெற்றிடங்கள் உள்ளன. வடக்கு மாகாணத்தில் 1560 வெற்றிடங்கள் உள்ளன.

இதேநேரம் மேல் மாகாணத்தில் 1188 வெற்றிடங்கள் உள்ளன. ஊவா மாகாணத்தில் 900 வெற்றிடங்கள் உள்ளன. கிழக்கு மாகாணத்தில் 2618 வெற்றிடங்கள் உள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: