விரைவில் கடலில் மீன்களை விட கழிவுகள் அதிகரித்திருக்கும் – அமைச்சர் சம்பிக்க!

2030ஆம் ஆண்டளவில் கடலில் உயிரினங்களை விட பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளின் எடை அதிகரித்திருக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச கரையோரப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தெஹிவளை- கல்கிஸ்ஸைக் கடற்கரையோரத்தை சுத்தம் செய்யும் சிரமதான நடவடிக்கையொன்று இன்று மேற்கொள்ளப்பட்டது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில், கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட ரசாயனக்கழிவுகள் காரணமாக நீர்வாழ் உயிரினங்கள் அழிந்து வருகின்றன.அவ்வாறு சமுத்திர உயிரினங்கள் அழிவுக்குள்ளானால் அது மனிதர்களை நேரடியாகப் பாதிக்கும்.அதே போன்று வெப்பமயமாதல் இன்று சர்வதேசம் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினையாகும். இதன் காரணமாகவே கடல்நீர் குடியிருப்புகள் வரை உட்புகுந்து அழிவுகளை ஏற்படுத்துகின்றது.எனவே சுற்றாடலை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகள் மூலமே மனிதன் பாதுகாப்பாக வாழ முடியும் என்றும் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|