விரைவில் ஏற்றுமதி விவசாய யுகத்தை உருவாக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க !

Thursday, September 5th, 2024

ஏற்றுமதி விவசாய யுகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாம் வேலைத்திட்டங்களை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

அதேபோன்று சில பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை என்பதனையும் ஏற்றுக்கொள்கிறோம். எனினும் அவற்றை ஒரே சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள முடியாது.

எதிர்வரும் 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் இயலும் ஸ்ரீலங்கா என்ற எண்ணக்கருவின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது திசைக்காட்டி மாற்றத்தை ஏற்படுத்துகிறதா? அல்லது நாம் மாற்றத்தை ஏற்படுத்துகிறோமா? திசைக்காட்டிக்கு எப்போதும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளைப் போன்று எமது விவசாயத்தையும் ஏற்றுமதி பொருளாதார நிலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நாம் யாருடனும் சென்று இணையவில்லை. எனினும் அநுரகுமார திஸாநாயக்க, முன்னதாக மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றதுடன் நல்லாட்சி அரசாங்கத்தின் போது தங்களுடன் இணைந்து கொண்டதாக சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

000

Related posts: