விரைவில் இந்த வருடத்துக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வு – தேர்தல் செயலகம் !

Thursday, May 31st, 2018

மாவட்டம்தோறும் 2018 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்புக்களின் வாக்காளர்களினை மீளாய்வு செய்யும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன் மூலமாக வாக்காளர் மீளக்கணக்கெடுக்கப்படவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விடுத்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உண்மையான ஜனநாயகம் வாக்குரிமையில் தங்கியுள்ளது. எனும் தலைப்பில் நாடு தளுவிய ரீதியில் மக்களுக்கு அறிவுறுத்தல் நிகழ்ச்சித்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே அனைத்து வீடுகளுக்கும் வாக்காளர் கணக்கெடுப்புக்காக எதிர் வரும் ஜூன் 14 ஆம் திகதிக்கு முன்னர் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கும் போது ஒத்துளைப்பு வழங்குங்கள்.

சர்வஜன வாக்குரிமை குடியுரிமை ஒன்றாகும். நாட்டில் வதிவொன்றைக்கொண்டுள்ள அனைத்து வீடுகளுக்கும் வாக்காளர் கணக்கெடுப்புப்படிவங்கள் எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதிக்ககு முன்னர் கிராம அலுவர்கள், சிறப்புக்கணக்கெடுப்பு அலுவர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.

உங்கள் வீட்டுக்கு கணக்கெடுப்புப்படிவமொன்று கிடைக்கப்பெறவில்லையெனின் உங்கள் கிராம அலுவலருக்கு அல்லது மாவட்டத்தேர்தல் அலுவலகத்துடன் உடன் தொடர்பு கொள்ள வேண்டும்.  வீட்டுக்கு வழங்கப்பட்டுள்ள தேருநர் கணக்கெடுப்பு  படிவத்தை ஜூலை 31 ஆம் திகதிக்கு முன் முறையாக பூர்த்தி செய்து

கிராம அலுவலகரிடமோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்திலே கையளிக்க முடியும்.

மேற்படி விபரத்தை குடும்ப அங்கத்தவர்கள், அயலவர்கள், நண்பர்கள், அரச அலுவலர்களுக்கு தெரியப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.

Related posts: