விரைவில் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை!

Wednesday, March 13th, 2019

மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களிலிருந்து 79 விண்ணப்பதாரிகளை நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அலுகோசு பதவிக்காக அமெரிக்க பிரஜை ஒருவர் உட்பட 102 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

குறித்த நேர்முகப் பரீட்சையின் பின்னர் அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவுசெய்யப்படுவர் எனவும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர்ப் பட்டியல் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


உறவுகள் காணாமல் போனோர்: சான்றிதழ்களை பெறுவதே நல்லது! - பரணகம
பொருளாதார அழிவை ஏற்படுத்துவதே Petya வைரஸின் நோக்கம்!
40 வருடங்களாக சீரமைக்கப்படாது இருக்கும்  பிராமணவோடை வீதியை சீரமைக்கக் கோரிக்கை!
வெளிவருகின்றது உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் பட்டியல் !
கழிவுகளாக எறியப்படும் உணவுகளை வளர்ப்பு பிராணிகளுக்கு உணவாக்குங்கள் : ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உற...