வியாழன் அன்று அலுவலர்கள் கணக்கெடுப்பு: விடுமுறைகள் இரத்து!

எதிர்வரும் 17ஆம் திகதி காலை 9மணி தொடக்கம் முற்பகல் 11.30மணிவரை நாடுபூராகவும் உள்ள அலுவலகங்களில் தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களத்தால் அரச, அரச சார்புத்துறை அலுவலர்களுக்கான கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதில் ஒவ்வொரு அலுவலர்களினதும் சேவை நிலையம், தனிப்பட்ட தகவல், நியமனம், சம்பள விபரம், விடுமுறை விபரம், மொழித் தேர்ச்சி, கல்வித்தகைமை, வதிவிட தகவல், போக்குவரத்து, தொழிநுட்ப அறிவு தொற்றுநோய் பற்றிய தகவல் என்பன சேகரிக்கப்படவுள்ளன. ஏற்கனவே இதற்கான பயிற்சியை நிறைவு செய்த கணக்கெடுப்பாளர்களே இந்தப் பதிவினை மேற்கொள்வர். அன்றையதினம் அலுவலர்களுக்கான விடுமுறைகள் யாவும் இரத்து செய்யப்படவுள்ளது எனவும் அன்றைய தினம் அலுவலகத்தில் தரித்து இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!
நுகர்வோர் அதிகாரசபை தொழிற்சங்க நடவடிக்கையில்!
நிர்ணய விலையை விட அதிகமான விலைக்கு காய்கறிகளை விற்ற வியாபாரிகள் கைது - நுகர்வேர் அதிகார சபை!
|
|