வியாபார நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்!

Monday, February 11th, 2019

யாழ். மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள அரச, மற்றும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழி, முதலாவதாகவும் பெரியளவிலும் அடுத்து விரும்பிய ஆங்கில அல்லது சிங்கள மொழிகளில் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொழும்பு தவிர்ந்த சிங்கள புறநகரங்களில் பல இடங்களில் தனிச் சிங்களத்திலேயே பெயர்ப் பலகைகள் உள்ளன. ஆனால் நாம் அதுபோலல்லாமல் எமது பகுதியில் பல இனத்தவரும் வந்து செல்வதால் தமிழைப் பெரியளவிலும் அடுத்து விரும்பிய மொழியான ஆங்கிலத்தையோ சிங்களத்தையோ பெயர்ப்பலகைகளில் இடலாம். இந்தத் தீர்மானத்தை கண்டிப்புடன் கடைப்பிடிக்குமாறும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.


இன்னும் சிலதினங்களுக்கு கனமழை தொடரும் - யாழ். வானிலை ஆய்வாளர் பிரதீபன்
மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொழுத்தும் செயலை செய்கிறது வடக்கு மாகாணசபை - ஈ.பி.டி.பியின் வடக்க...
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!
இந்த ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு: வெளியானது முக்கிய அம்சங்கள்!
பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!