வியாபாரிகள், நுகர்வோர்களுக்கு பாதுகாப்பாகவே ஈ.பி.டி.பி செயற்படும் – சாவகச்சேரி சந்தை விவகாரம் தொடர்பில் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, June 6th, 2019

சாவகச்சேரி நகர சந்தையை குத்தகைக்கு வழங்க நகரசபை நிர்வாகம் முடிவெடுத்துள்ளமையை இடைநிறுத்தி, நகரசபையே தொடர்ந்து நடத்த தங்கள் சபை உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டுமென சந்தை வியாபாரிகள் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாவகச்சேரி நகர சந்தையை குத்தகைக்கு விடுவது தொடர்பாக  வியாபாரிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தினரைச் சந்தித்து இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.

சாவகச்சேரி சந்தை கடந்த காலத்தில் நகரசரபை ஊழியர்களால் நிர்வகிக்கிப்பட்டு வந்தது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை நிர்வாகம் அதனை குத்தகைக்கு விடுவதற்கு முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சந்தையின் அடிப்படை வசதிகள் நிவர்த்தி செய்து தருமாறு நகரசபை நிர்வாகத்திடம் பல தடவைகள் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும் அது கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் சந்தையின் பின் வாயில் கதவுகள் பூட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

உள்ளுராட்சி மன்ற சட்டத்திட்டத்திற்கு அமைவாக நகரசபை செயற்படவேண்டும். வியாபாரிகளுடன் கலந்தாலோசித்திருந்தால் இவ்வாறு பிணக்கு உருவாகியிருக்காது. எனினும் விவசாய பயிர்ச் செய்கையாளர்கள், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்களுக்கு பாதுகாப்பாகவே ஈ.பி.டி.பி செயற்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், சாவகச்சேரி நகர நிர்வாகச் செயலாளர் கந்தையா லோகேந்திரன், சாவகச்சேரி பிரதேச நிர்வாகச் செயலாளர் விநாயமூர்த்தி நகரசபை உறுப்பினர்கள் திருக்குமரன், லலிதாராணி, சண்முகரஞ்சினி ஆகியேர் சமுகமளித்திருந்தனர்.        

 

Related posts: