வியட்நாம் இலங்கை கடற்றொழில் அபிவிருத்திக்கு உதவி!

நாட்டின் கடல் வள அபிவிருத்திக்காக வியட்நாம் தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வியட்நாமிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் இணைந்துக் கொண்டிருந்த கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர, அந்த நாட்டு கடற்றொழில் அதிகாரிகளுடன் நடாத்தி பேச்சுவார்த்தையின் பிரதிபலனாகவே இந்த உதவித் திட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
வியட்நாம் நீரியல்வள தொழில் தொடர்பான கல்வி சுற்றுப் பயணத்திலும் அமைச்சர் மஹிந்த அமரவீர பங்குப்பற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.ஏற்றுமதி மீன் வகையான பென்ஜியஸ் என்ற மீன் வகையை இலங்கையில் உற்பத்தி செய்கின்றமை குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த மீன்வகையை ஏற்றுமதி செய்வதன் ஊடாக ஒரு கிலோகிராமிற்கு 3000 ரூபா கிடைப்பதுடன், இதற்காக பாரிய கேள்வி நிலவுகின்றது எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
|
|