விமான பாதுகாப்பில் இலங்கைக்கு முதலிடம்!
Sunday, July 29th, 2018கடந்த ஜூன் மாதம் 4ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை சர்வதேச சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் சிவில் விமான பாதுகாப்பில் இலங்கை தெற்காசியாவிலேயே முதலாவது இடத்தில் இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தெரிவித்தார்.
இந்த சர்வதேச அறிக்கையை அமைச்சரிடம் கையளிக்கும் நிகழ்வு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
சர்வதேச ரீதியில் இலங்கை இந்த கௌரவத்தைப் பெற்றிருக்கும் நிலையில் உள்ளூர் விமான சேவைகளை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், உள்ளூர் சுற்றுலா பயணிகள் தாங்கிக் கொள்ளக் கூடிய விலையில் விமான டிக்கட்டுக்களின் வற்வரியை குறைப்பது தொடர்பில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடவிருப்பதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
Related posts:
|
|