விமான நிலைய வி.ஐ.பி வாயிலை பயன்படுத்துவது தொடர்பில் விசேட கட்டுப்பாடு !

Tuesday, December 10th, 2019

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட விருந்தினர்கள் வந்துசெல்லும் வி.ஐ.பி வாயிலை பயன்படுத்துவது தொடர்பில் விசேட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அரசியல்வாதிகள் இனி சாதாரண பயணிகள் செல்லும் வழியில் சென்றுவரவேண்டுமெனவும் கூறப்படுகின்றது. அப்படி அல்லாமல் அவர்கள் வி ஐ பி வாசலை பயன்படுத்த விரும்புவார்கள் எனில் தேவைப்படின் ஆயிரம் டொலரை செலுத்தி அதனூடாக செல்லலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் வெளிநாட்டில் இருந்து வரும் முக்கிய அதிதிகள் மற்றும் இராஜதந்திரிகள் விமான நிலைய விசேட பிரமுகர்களுக்கான வாயிலில் வந்துசெல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

இதேவேளை ஏற்கனவே இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,சாதாரண பிரமுகர்கள் பயன்படுத்தும் வாயிலூடாகவே சென்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: