விமான நிலையம் திறக்கப்படும் திகதியில் மீண்டும் தாமதம் – விமான நிலையம் மற்றும் சேவையின் உப தலைவர்!

Sunday, July 12th, 2020

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கும் நடவடிக்கை மேலும் தாமதமாகலாம் என விமான நிலையம் மற்றும் சேவையின் உப தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி விமான நிலையத்தை திறக்கப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. எனினும் பின்னர் திறக்கப்படும் திகதி ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதனை கருத்திற் கொண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி பின்னர் விமான நிலையத்தினை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் திறக்கப்படும் உரிய திகதியை இன்னமும் அறிவிக்க முடியாத நிலை காணப்பட்டுள்ளதாகவும் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையும் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: