விமான நிலையத்தில் பாரிய மோசடி!

Tuesday, April 3rd, 2018

குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நீண்ட காலமாக கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள ஓய்வறையில் நடத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத மதுபான களஞ்சியசாலைசுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பு கலால்வரி போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் இவ்வாறு தமது ஓய்வறையில் மறைத்து வைக்கப்பட்ட அதிக விலை கொண்ட சுமார் 250 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மதுபான போத்தல்கள் 8 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

Related posts: