விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை – சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Monday, May 10th, 2021

விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை எந்த தீர்’மானமும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க எனினும் கொவிட் குழுவின் முடிவுக்கு ஏற்ப தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் கொவிட் பரவியிருந்தாலும், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களின்படி இலங்கைத் தொழிலாளர்களை திருப்பி அனுப்புவது தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் அரசாங்க தனிமைப்படுத்தப்பட்ட மையங்களைப் போலவே தொடரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விமான நிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் ரணதுங்க கூறியுள்ளார்.

இலங்கை தொழிலாளர்களிடையே கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அவர்களிடமிருந்து இதுவரை எந்தக் கொத்தணிகளும் உருவாகவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: