விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, December 3rd, 2020

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏதுவாக விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி சுகாதார அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய விமான நிலையங்களை திறக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: