விமான நிலையங்களின் செயற்பாட்டை தடையின்றி முன்னெடுங்கள்! – விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவுறுத்து!

ஊரடங்கு காலப்பகுதியில் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களின் செயல்பாட்டைத் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட போதிலும், இலங்கை விமான நிலையங்களின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் மக்கள் விமான நிலையங்களுக்குச் செல்வதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விமான அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் வகையில் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
Related posts:
|
|