விமானப் பயணிகளின் மூலம் வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் – விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி!

விமானப் பயணிகளின் மூலம் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
விமானப் பயணிகள் ஒன்றிணைவதை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. சகல விமானப் பயணிகளும் சுகாதார சட்டங்களை பின்பற்றுவது அவசியமாகும்.
அத்தியாவசிய விமானப் பணியாளர்களை மாத்திரம் நாளை தொடக்கம் சேவைக்கு அழைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகை இருநாடுகளின் உறவை பலப்படுத்தியுள்ளது - மலேஷிய பிரதமர் !
சாவகச்சேரியில் 72 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!
முதல்முதலாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை கிளிநொச்சி அறிமுகம்!
|
|