விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைக்க தீர்மானம் இல்லை – கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!

விமானப்படை வீரர்கள் பாடசாலை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விமானப்படை வீரர்கள் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர்களாக இணைத்து கொள்ளப்பட்டிருப்பதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ள கூற்று தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் றோகினி கவிரத்ன நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..
அத்துடன் இது தொடர்பான விடயங்களை கண்டறிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புகையிரதக் கடவையாளரைத் தாக்கிய 77 வயதான முதியவர் கைது!
புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு - சகல பிரச்சினைகளுக்கும் இரண்டு மாதங்களுக்குள...
மக்களின் கோரிக்கைகளை சரியாக நிறைவேற்றுபவர்கள் ராஜபக்ஷர்களே - இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரி...
|
|