விமானத்தில் 75 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு நீக்கம் – சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

இலங்கை வரும் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒக்டோபர் 7 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு விமானத்தில் முன்பு அதிகபட்சமாக 75 பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிறுவனங்கள் அவர்களுக்கு ஏற்ற பயணிகளுடன் சேவையை முன்னெடுக்க முடியும் என கூறியுள்ளது.
சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தடுப்பூசி பெறாத பயணிகள் 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரிசி, பருப்பு விலைகள் குறைப்பு!
தவிசாளர் தன்னிச்சையான செயற்பாடு - பேருந்து நிலையத்துள் சிறு வியாபர கடைகள் அதிகரிப்பு - ஈ.பி.டி.பியி...
மற்றுமொரு தடுப்பூசியை பயன்படுத்த WHO வின் அனுமதிக்காக காத்திருக்கும் இலங்கை!
|
|