விமல் வீரவங்ச வைத்தியசாலையில் அனுமதி!

Sunday, March 26th, 2017

வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த விமல் வீரவங்ச சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தன்னை விளக்கமறியலில் வைத்து 70 இற்கும் மேற்பட்ட நாட்கள் கடந்துள்ள நிலையில் பிணை வழங்கப்படவில்லை என வீரவங்ச ஆட்சேபம் தெரிவித்துள்ளார். பிணை வழங்குமாறு கோரி கடந்த ஐந்து நாட்களாகஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த நிலையில் உடல்நிலை மோசமானதால் வீரவங்ச உடனடியாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஆட்சிக்காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில்,விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

Related posts:

வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு 10 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி ச...
முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே இலங்கை இன்னும் உள்ளது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மீண்டும் கட்டுப்பாட்டு விலை - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்ச...