விமலின் கறுப்புக் கொடி விவகாரம் மறுக்கிறார் முன்னாள் ஜனாதிபதி

Saturday, May 13th, 2017

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை  விஜயம் வழமையான நடை முறைகளில் ஒன்றே எனவும் அது தொடர்பில் சொல்வதற்கு எதுவும் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ருவன்வெலவில் உள்ள ஒரு விகாரையில் நேற்று முன்தினம் வியாழக் கிழமை இடம்பெற்ற ஒரு மத வைபவத்தைத் தொடர்ந்து நிருபர்களிடம்  உரையாற்றிய போதே இவ்வாறு  தெரவித்த அவர் மோடி கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்விலும்  தான் பங்குபற்றுவதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

கடந்த மேதினக் கூட்டத்தில்வெசாக் தினக் கொண்டாடங்களின் போது  மக்கள் கருப்பு கொடிஏற்றி தமது  எதிர்ப்பை வெளியிட வேண்டும் என  விமல் வீரவன்ச தெரிவித்த  கருத்துப் ற்றி கேட்டபோது, அது  முழுமையான பொய்ச்செய்தி எனவும் விமல் வீரவன்சவின் கருத்தை தவறாகப் புரிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

அவரது பேச்சு சரியாக புரிந்து கொள்ளப்ப டவில்லை எனவும் வெசாக்  கொண்டாட்டம் பற்றி எந்த கருத்தையும்விமல் வீரவன்ச  தெரிவிக்கவில்லை. எனவும் வெசாக் தொடர்பில் எந்த பிரச்சனையும் இல்லை, என்று ம் மஹிந்த கூறினார்.

இந்திய பிரதம மந்திரி அல்லது வேறு எந்தப் பிரதமரைப் பற்றியும் பேசுவதற்கு எனக்கு விருப்பமில்லை என்றும்கூறிய அவர் முடிந்தால் இந்தியப்பிரதம மந்திரி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேண் எனவும்  அதில்  எந்த சிக்கலும் இல்லை என்றும் கூறினார்.

Related posts: