விபத்து: சராசரியாக ஒரு நாளில் 8 பேர் உயிரிழப்பு!

Saturday, August 4th, 2018

கடந்த ஆண்டில் வீதி விபத்துக்களால் சாரசரியாக ஒரு நாளைக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரின்  தகவல்படி  2017 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் ஒரு நாளைக்கு 12 பேர் காயங்களுக்குள்ளாகி உள்ளனர் எனப் பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாட்டு வீதிப் பாதுகாப்பு மற்றும் அதிவேகப் பாதை சுற்றுலாப்பிரிவு பணிப்பாளர் பொலிஸ் அதிகாரி இந்திக ஹப்புகொட தெரிவித்தார்.

இதேவேளை 2016 ஆம் ஆண்டில் 2,798 அபாயகர விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 2017 இல் அபாயகர விபத்துக்கள் 2,922 ஆக  அதிகரித்துள்ளன. அதன்படி 2016 இல் 2,961 பேரும் 2017 இல் 3,100 பேரும் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இடம்பெற்ற அபாயகரமான விபத்துக்களுள் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1,514 ஆக உள்ளதாகப் பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Related posts: