விபத்துக்கள் மூலம் மூளைச்சாவடைந்தோரின் சிறுநீரகங்களை பயன்படுத்த முடிவு!
Sunday, November 27th, 2016
திடீர் விபத்துக்களினால் மூளைச்சாவடைந்தவர்களின் சிறுநீரகங்களை சிறுநீரக நோயாளர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடியுமென சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இலங்கையில் வருடாந்தம் விபத்துக்கள் மூலம் 700 க்கும் 800க்கும் இடைப்பட்டோர் மரணிக்கின்றனர். இவ்வாறான மரணங்கள் மூலம் ஆரோ க்கியமான சிறுநீரகங்கள் பயனின்றி அழிவடைகின்றன. இந்த நிலையில் பயனின்றி அழிகின்ற சிறுநீரகங்களை உறவினர்களின் அனுமதியுடன் சிறுநீரக நோயாளர்களுக்கு பொருத்தும் சந் தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் வருடாந்தம் ஐந்தாயிரம் சிறுநீரக நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
Related posts:
நெருங்கிய நண்பரொருவரை இழந்துவிட்டோம் – பிடல் கஸ்ட்ரோவின் மறைவு குறித்து ஜனாதிபதி!
உயர்தரப் பரீட்சையில் எந்தப் பாடங்களில் தகுதி பெற்றிருந்தாலும் தாதியராக உள்வாங்க முடிவு!
பிராணவாயுவை எடுத்துவர சென்னை நோக்கி பயணமானது சக்தி!
|
|