விபத்துக்களுக்கு காரணமானவர்களை அடையாளம் காண்பதற்கு சி.சி.ரி.வி!

Thursday, June 15th, 2017

வீதி விபத்துக்களுக்கு காரணமானவர்களை அடையாளம் காண்பதற்காக சிசிரிவி கமராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

வீதி விபத்தில் மரணமானவர் சார்பில் ஒருவருக்கு 2 இலட்சம் ரூபாவும், ஊனமுற்ற ஒருவருக்காக 1 இலட்சம் ரூபா வீதமும் நட்டஈடு வழங்கப்படடது.   வீதி விபத்துக்கள் காரணமாக தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிரான தண்டப்பணம் அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

ஒழுக்க விதிமுறைகளுக்கு அமைவாக, செயற்படும் சாரதிகளை உருவாக்குவதற்குத் தேவையான சட்டதிட்டங்களைத் தயாரிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேபோன்று பயிற்சியும் வழங்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்தார்.

Related posts: