விபத்துக்களால் இவ்வாண்டு உயிரிழப்பு அதிகம் – அமைச்சர் சகால தெரிவிப்பு!
Thursday, November 24th, 2016
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் செம்ரெம்பர் மாதம் வரை நடபெற்ற விபத்துக்களின் உயிரிழப்பு பெருமளவு அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டு 1958 பேர் விபத்துக்களால் சாவடைந்திருந்தனர். இந்த ஆண்டு செம்ரெம்பர் மாதம் வரையில் 2207 பேர் விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகால ரட்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆண்டு உயிரிழப்பை ஏற்படுத்திய 1820 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. அதில் 1958 பேர் சாவடைந்திருந்தனர். இந்த ஆண்டு செம்ரெம்பர் மாதம் வரையில் 2090 உயிரிழடப்பை ஏற்படுத்திய விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2207 பேர் உயிரிழந்துள்ளனர். பாரதூரமான விபத்துக்கள் கடந்த ஆண்டு 4985 பதிவாகிய நிலையில், நடப்பு ஆண்டின் செம்ரெம்பர் மாதம் வரை 6142 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2015ஆம் ஆண்டு சிறு விபத்துக்கள், நட்டம் ஏற்படுத்திய விபத்துக்கள் உள்ளடங்கலாக 25ஆயிரத்து 1520 சம்பவங்களும், 2016ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் வரையில் 29 ஆயிரத்து 630 சம்பவங்களும் பதிவகியுள்ளன. – என்றார்.
Related posts:
|
|