விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு இராணுவ சிப்பாய்க்கு உத்தரவு!

Thursday, November 3rd, 2016

விபத்தின் ஊடாக பெரும் காயத்தினை ஏற்படுத்திய இராணுவ சிப்பாய்க்கு 9ஆயிரம் ரூபா அபராதம் விதித்த மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன் பாதிக்கப்பட்ட நபருக்கு 1 இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டார். கடந்த ஜீன் மாதம் 5அம் திகதி காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இராணுவ ஹப் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இச் சம்பவத்தில் சாவகச்சேரி நுணாவில் பகுதியைச் சேர்ந்த ஜயாத்தம்பி காணமூர்த்தி (வயது-40) என்ற கிராம சேவையாளர் படுகாயமடைந்தனர். இவ் விபத்து சம்பவத்துடன் தொடர்புபட்ட காங்கேசன்துறை 5ஆவது பொறியியல் படைப்பிரிவினை சேர்ந்த இராணுவ வாகான சாரதி கைது செய்யப்பட்டு, சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் கடந்த 5 மாதங்களாக இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தெல்லிப்பழை போக்குவரத்து பொலிஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரம் மன்றில் வாசிக்கப்பட்ட போது, சாரதி தனது குற்றத்தினை ஏற்றுக்கொண்;டார். வழக்கினை விசாரணை செய்ய நீதவான் விபத்தினை தடுக்க தவறியமை, ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு 9 ஆயிரம் ரூபா அபராதம் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட நபருக்கு 1 இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

maxresdefault

Related posts: