விபத்தில் பலியான மாணவி கேஷனாவின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை!

புங்குடுதீவுப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவி திருலோகநாதன் கேஷனாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.
பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சார்த்தி இறுதி அஞ்சலி செலுத்திய அதேவேளை பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார்.
குறித்த பாடசாலை மாணவி தனது மாமனாருடன் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது நேரிட்ட வாகனவிபத்தில் நேற்றையதினம் (24.01.2018) உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய பிரதமருடன் கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டார் ஜனாதிபதி!
புதிய வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்!
பிரதமரின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனைய திட்டத்திற்கான பணிகள் ஆரம...
|
|