விபத்தில் உயிரிழப்பவர்களின் அவயவங்களை தானம்: சட்ட ரீதியிலான அனுமதி!

Monday, January 15th, 2018

வாகன விபத்தில் உயிரிழப்பவர்களின் அவயவங்களை தானம் செய்யும் அனுமதியை சாரதி அனுமதிப் பத்திரத்தின் ஊடாக வழங்குவதற்குரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் சஞ்சீவ பந்துகீர்த்தி இதுதொடர்பாக தெரிவிக்கையில் . தமது அவயவங்களை தானம் செய்ய விரும்புவோர் சாரதி அனுமதிப் பத்திரத்தில் அதனை குறிப்பிடுவதன் மூலம் இந்தப் பணியை துரிதமாக மேற்கொள்ள முடியும் என்று கூறினார்.

இதற்குத் தேவையான சட்ட அனுமதி மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மக்களுக்குச் சரியான விளக்கம் இல்லை. வாகன விபத்துக்களில் உயிரிழப்போர்களில் பெரும்பாலானோர் 15 வயதிற்கும் 45 வயதிற்கும் இடைப்பட்டவர்களாவர். அதனால் இவர்களின் அவயவங்களை மற்றவர்களுக்குப் பொருத்துவதன் மூலம் அவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான சாத்தியம் அதிகம் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் சஞ்சீவ பந்துகீர்த்தி மேலும் கூறினார்.

Related posts: