வினைத்திறன்மிக்கதாக சமுர்த்தி இயக்கம் மாற்றப்படும்- ஜனாதிபதி!

Wednesday, August 24th, 2016

திருப்தியற்ற ஓர் அரச நிறுவனமாக மாறியுள்ள சமுர்த்தி இயக்கத்தை மிகவும் வினைத்திறனும் பயனுறுதியும் வாய்ந்த ஒரு நிறுவனமாக மாற்றியமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சமுர்த்தி முகாமையாளர்களின் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, நாடளாவிய ரீதியில் சமுர்த்தி முகாமையாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  இதேவேளை, திவிநெகும அபிவிருத்தித் தினைக்களத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

Related posts: